பச்சை கற்பூரத்தின் பரிபூரண குணங்கள் பார்போம் வாங்க.!

கண்ணோட்டம் Cinnamomum camphora (பொதுவாக கற்பூர மரம், camphorwood அல்லது கற்பூரம் லாரெல் என அழைக்கப்படும்) உயரமான 20-30 மீ (66-98 அடி) வரை வளரும் பெரிய பசுமையான மரம் உள்ளது. இலைகள் பளபளப்பான, மெழுகு தோற்றம் மற்றும் நசுக்கும்போது கற்பூர வாசனை இருக்கும். … இது 20 மீ அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய மரமாக மாறுகிறது. பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.
ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

நாம் பூஜைகளுக்கு பயன்படுத்திவரும் கற்பூரத்தில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. சாதாரணமாக பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இது அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் குணங்களும் உள்ளது. அதிலும் கற்பூரத்தின் சக்தி மற்றும் பொறுப்பு அதிகம், இதன் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பயன்கள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
பண வரவை அதிகரிக்கும்
கற்பூரத்தின் மூலமாக தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒரு சிறிய காகிதத்தில் கற்பூரத்தை மறித்து உங்கள் பணப்பையில் வைத்துக்கொள்வது நல்லது, இது உங்கள் பண வரவை அதிகரிக்கும். பச்சை கற்பூரதிற்க்கு செல்வத்தை ஈர்க்கும் சக்திகள் அதிகமாக உள்ளது. எனவே இதை நாம் பூஜை அறைகளில் வைத்து வழிபடுவதன் மூலம் உங்களுக்கான நேர்மறை சக்திகள் அதிகரித்து பண வரவு மற்றும் செல்வங்களை அதிகரிக்கும்.

திருப்பதியில் நடக்கும் அதிசயம்
கற்பூரத்தை நாம் பாறைகள் மேல் தடவினால் சில நாட்களிலேயே அந்த பாறைகள் மேல் விரிசல்கள் ஏற்படும் ஆனால் திருப்பதியில் இருக்கும் சிவபெருமானின் உருவத்தின் மேல் எப்போதும் கற்பூரத்தை தடவி வைத்துள்ளார்கள், ஆனால் பாறைகளால் செய்யப்பட்ட அந்த சிவபெருமானின் உருவத்தில் எந்த பாதிப்புகளும் ஏற்படுவதில்லை இதற்கு கற்பூரத்தின் சிறப்பு தன்மையே காரணம். இதனால் பச்சை கற்பூரத்தை பூசி வழிபாடு செய்வதற்காக பெருமானின் ஆலயத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
லக்ஷ்மி மற்றும் மனநிறைவுக்கு கற்பூரம்
பச்சைக் கற்பூரத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டில் உள்ள குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாள் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
பச்சை கற்பூரம் வாசனையை அதிகமாக தருவதினால் இதைக் கொண்டு வீட்டில் பூஜை செய்வதன் மூலம், வீடு முழுவதும் வாசனை பறவி துர்சக்திகள் அனைத்தையும் போக்கி நேர்மரை சிந்தனையை அதிகரிக்கும். அதைப்போல் குடும்பத்திள் இருக்கும் சச்சரவுகள் விலகி நிம்மதியான சூழலை உண்டாக்கும். உங்களுக்கு ஏற்படும் வீண் செலவுகள் அனைத்தும் குறைந்து பணவரவு அதிகரிக்கும்.
தொழில் பெருகுவதற்கு கற்பூரம்
பணப் பெட்டிகள் இருக்கும் அறையில் கற்பூரத்தை வைப்பதன் மூலம் அதை சுற்றி பரவும் எதிர்மறை சக்திகளை தடித்து நேர் மறை சக்திகளை உள்ளே இழுக்கும். அதே போல் உங்கள் கடைகளில் இருக்கும் பணப் பெட்டியில் ஏலக்காய், சோம்பு, பச்சை கற்பூரத்தை சேர்த்து பச்சை துணியில் கட்டி ஒரு ஓரத்தில் வைப்பதன் மூலம் வியாபாரம் அதிகரிக்கும். எனவே எல்லா சுபகாரியங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின்போது பச்சை கற்பூரத்தை மறவாமல் பயன்படுத்த வேண்டும். இதில் உங்களை மற்றும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரின் மன நிலையை நன்றாகவைத்துக்கொள்ளும். அதேபோல் குடும்ப பிரச்சினைகள் என அனைத்தையும் தீர்த்து உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தி செல்லும்.

Views: (265)